பொழுதுபோக்கு
உங்களால் கடவுளை முட்டாள் ஆக்க முடியாது; ரவி மோகன் மனைவி ஆர்த்தி ஆவேச பதிவு!
உங்களால் கடவுளை முட்டாள் ஆக்க முடியாது; ரவி மோகன் மனைவி ஆர்த்தி ஆவேச பதிவு!
நடிகரு ரவி மோகன் – பாடகி கெனிஷா இருவரும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவிய நிலையில், இது குறித்து ரவி மோகனின் முன்னாள் மனைவி ஆர்த்தி வெளியிட்டுள்ள பதிவு கவனம் ஈர்த்துள்ளது.தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்த ஜெயம் ரவி சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்து தனது பெயரையும் ரவி மோகன் என்று மாற்றிக்கொண்டார். அதன்பிறகு பாடகி கெனிஷாவுடன், ஐசரி கணேஷ் இல்ல திருமணத்தில், பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்திய ரவி மோகன், கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்பு கெனிஷாவுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.இந்நிலையில், நடிகர் ரவி மோகன், இன்று ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் தொடங்க விழா இன்று நடைபெற்ற நிலையில், கன்ன சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், நடிகர் சிவகார்த்திகேயன், கார்த்தி, யோகி பாபு, எஸ்.ஜே சூர்யா என பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த தயாரிப்பு நிறுவனத்தில் பாட்னராக கெனிஷாவும் இருப்பதாக ரவி மோகன் கூறியுள்ளார்.இதனிடையே தயாரிப்பு நிறுவனம் சிறப்பாக வர வேண்டும் என்று, ரவி மோகன் – கெனிஷா இருவரும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், ரவி மோகனின் முன்னாள் மனைவி ஆர்த்தி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் “நீங்கள் பிறரை முட்டாள் ஆக்கலாம். உங்களையே நீங்கள் முட்டாளாக்கிக் கொள்ளலாம். ஆனால், நீங்கள் கடவுளை முட்டாள் ஆக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.A post shared by Aarti Ravi (@aarti.ravi)அதேபோல் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ‘பேரன்டிங்’ குறித்து எனக்குக் கிடைத்த சிறந்த அறிவுரை எது தெரியுமா? “எப்பொழுதும் உங்கள் பிள்ளைகள் பக்கம் இருங்கள். அந்த அப்பாவிகளுக்கு உங்களின் அன்பும், நேரமும் தேவை. எது நடந்தாலும் உங்கள் பிள்ளைகளின் மன அமைதியைக் காப்பாற்றுங்கள், என்று தெரிவித்துள்ளார். ஆர்த்தியின் இப்பதிவு ரசிகர்களிடம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய விண்ணப்பித்திருக்கும் ரவி மோகன், தனது மனைவி மற்றும் மகன்களை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், மகன்களை தன்னிடம் கொண்டு வர கடைசி வரை போராடுவேன் என்று தெரிவித்துள்ளார்.