இலங்கை
ஒழுக்கமான சாரதிகளை ஊக்கப்படுத்த நடவடிக்கை!
ஒழுக்கமான சாரதிகளை ஊக்கப்படுத்த நடவடிக்கை!
ஒழுக்கமானமுறையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும் என சபாநாயகர் விடுத்த கோரிக்கையை நடைமுறைப்படுத்தத்தயார் என்று பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அண்மையில் சபாநாயகர் ஜகத்விக்கிரமரத்னவை நாடாளுமன்றத்தில் சந்தித்த போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டன. வீதி விபத்துகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.