பொழுதுபோக்கு
கடந்த 25 ஆண்டுகளில் இந்த இரு படங்கள் தான் கிரேட்; இதில் என் படங்கள் கூட இல்ல: மிஷ்கின் சொன்னது எந்த படம்?
கடந்த 25 ஆண்டுகளில் இந்த இரு படங்கள் தான் கிரேட்; இதில் என் படங்கள் கூட இல்ல: மிஷ்கின் சொன்னது எந்த படம்?
கடந்த 25 ஆண்டு கால தமிழ் சினிமாவில், இந்த 2 படங்கள் மட்டும் தான் நல்ல படங்கள். ஆனால் இந்த இரு படங்களுமே கவனிக்கப்படாத படங்களாக இருக்கிறது என்று இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் கூறியுள்ளார். அவர் சொன்ன இரு படங்கள் என்னென்ன?தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கி வெற்றி கண்ட மிஷ்கின், விஜய் நடிப்பில் வெளியான யூத் உள்ளிட்ட சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதன்பிறகு நரேன் நடிப்பில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், அடுத்து நரேன் நடிப்பில் அஞ்சாதே படத்தை இயக்கினார். இந்த இரு படங்களுமே பாக்ஸ் ஆபீஸில் பெரிய வெற்றிப்படமாக அமைந்துது.தொடர்ந்து நந்தலாலா என்ற படத்தை இயக்கி நாயகனாக நடித்த மிஷ்கின் அடுத்து, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், யுத்தம் செய், சைகோ, பிசாசு உள்ளிட்ட படங்களை இயக்கினார். அதேபோல் சவரக்கத்தி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள இவர், தற்போது பிசாசு 2, டிரெய்ன் என இரு படங்களை இயக்கியுள்ளார். இந்த இரு படங்களுமே அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில், விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் மிஷ்கின் நடுவராக பங்கேற்றுள்ளார்.சமீபத்தில் நேர்காணல் பேசிய அவர், கடந்த 25 வருடங்களில் வெளியான அனைத்து படங்களிலும் 2 படங்கள் மட்டும் தான் கிரேட் என்று சொல்வேன். அதில் ஒன்று கொட்டுக்காளி, மற்றொன்று கடைசி விவசாயி. இதை நான் சொல்லும்போது பலருக்கும் கோபம் வரும். ஆனால் இன்னும் நூறு வருடங்கள் கழித்து இதை ஒத்துக்கொள்வார்கள். இந்த இரண்டு படங்களும் ஓடவில்லை. நிறைபேரால் பார்க்கப்படவில்லை. அதேபோல் இந்த இரு படங்களும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளனது.இந்த இரண்டு படங்களையும் பார்த்த நிறையபேர் இதெல்லாம் ஒரு படமா என்று திட்டினார்கள். அதேபோல், இந்த இரண்டு படங்களையும் நீங்கள் பாராட்டினீங்க என்று என்னையும் திட்டினார்கள். இதுபோல் திட்டியவர்களின் பேரன் பேத்திகள் பிற்காலத்தில் இந்த படத்தை பார்த்து, ஆச்சரியப்பட்டு போவாங்க ஏன்னா இதை சொல்வதற்கு எனக்கு த்ராணி வேணும். என் படங்களை போட்டு மிதிக்கக் கூடிய த்ராணி எனக்கு வேணும். அதை சொல்றதற்கு நான் கொஞ்சமும் வெக்கப்படவில்லை.30 வருடத்தில், இந்த இரண்டு படம்தான் கிரேட்டஸ் பீல்ஸ் சொல்கிறேன். என் படங்களே சேர்த்துப் பேசுகிறேன். என்னுடைய படங்களே இதில் வராது என்று மிஷ்கின் கூறியுள்ளார்.