இலங்கை

காற்றாலை, கனியமணல் அகழ்வு விவகாரம் -ஜனாதிபதி அநுர இரட்டை நிலைப்பாடு!

Published

on

காற்றாலை, கனியமணல் அகழ்வு விவகாரம் -ஜனாதிபதி அநுர இரட்டை நிலைப்பாடு!

மன்னார் காற்றாலைத் திட்டம், கனிய மணல் அகழ்வு போன்றவற்றில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முரண்பட்ட நிலையில் மாறுபட்ட வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். இந்த இரட்டை நிலைப்பாடு போராட்டத் தரப்பான மன்னார் மாவட்ட மக்களுக்கு ஏமாற்றத்தையே எதிர்காலத்தில் கொடுக்கும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

Advertisement

மன்னார் மாவட்ட போராட்டத் தரப்பின் பிரதிநிதிகளை ஜனாதிபதி அநுர சந்தித்த போது அநுர மேற்கொண்ட உரையாடல் சந்தித்தவர்களுக்கு சந்தேகத்தையும் இரட்டை நிலைப்பாட்டையும் உணர வைத்தது.

அத்தோடு கனியமணல் அகழ்வு மற்றும் காற்றலை மின்சார திட்டங்களை தடுக்க ஒரு மாத அவகாசம் கேட்டார் .

திட்டங்கள் தொடர்பாக அதன் சாதக பாதகங்களை ஆராய ஒரு குழுவை நியமிப்பதாகவும் குழுவின் அறிக்கையின் பின்னர் முடிவுகளை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர கூறியுள்ளார்.

Advertisement

போராட்டக் குழுவின் பிரதிநிதிகளை சந்தித்த சில தினங்களில் மன்னார் மாவட்ட வணக்கத்திற்குரிய ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்த போது பிரச்சினைக்குரிய திட்டங்களை உடனடியாக நிறுத்துவதாக ஆயரிடம் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

ஒரு மாத அவகாசம் கேட்ட ஜனாதிபதி அநுர ஒரு சில நாட்களில் உடனடியாக நிறுத்துவதாக கூறியமை முரண்பட்ட இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

காற்றலை மின்சாரத்தை அமைப்பதற்கான உபகரணங்கள் அடங்கிய நூற்றுக்கு அதிகமான பாரஊர்திகள் மன்னார் மாவட்டத்துக்குள் வந்துள்ள நிலையில் ஐனாதிபதியின் முன் பின் முரணான உரையாடல் அவரது இரட்டை நிலைப்பாட்டையே உறுதி செய்கிறது என தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version