இலங்கை

கீரி சம்பா தட்டுப்பாடு – அமைச்சர் தெரிவிப்பு!

Published

on

கீரி சம்பா தட்டுப்பாடு – அமைச்சர் தெரிவிப்பு!

நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு செயற்கையாக பற்றாக்குறையை ஏற்படுத்த சிலர் முற்படுவதாக வர்த்தக, வாணிப,  அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

இதற்கான தீர்வு கிடைக்கப் பெறாவிட்டால், கிரி சம்பாவுக்கான மாற்று அரிசியை வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

சந்தையில் கீரி சம்பாவுக்கு மாத்திரமே பற்றாக்குறை நிலவுகின்றது. எனவே கீரி சம்பாவுக்கான மாற்று அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளோம். 

ஆனால் இதற்கான இறுதி முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. தற்போது சிறுபோக அறுவடை இடம்பெறுகின்றமையும் இதற்கான பிரதான காரணமாகும். 

Advertisement

இருப்பினும், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கீரி சம்பா பற்றாக்குறை மேலும் மோசமடையுமானால், கீரி சம்பாவுக்கான மாற்று அரிசி வகையான ‘GR11’ இல் 40,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய முடிவு எடுக்கப்படும். 

பொலன்னறுவையின் களஞ்சியசாலைகளில் மட்டும் 85,000 மெட்ரிக் தொன் கீரி சம்பா இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். அதில் ஒரு தொகை சந்தைக்கு விடுவிக்கப்படுமானால், இந்த பிரச்சினைக்கான தீர்வை எட்ட முடியும் என  அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version