இலங்கை
கைலகொட வயல்வெளிக்குள் சடலம் மீட்பு!
கைலகொட வயல்வெளிக்குள் சடலம் மீட்பு!
வயல்வெளிக்குள் நிர்வாண நிலையில் சடலமொன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை -கைலகொட முதியோர் இல்லத்திற்கு அருகிலுள்ள வயல்வெளியிலிருந்தே இன்று (18) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
வயலின் உரிமையாளர் நான்கு நாட்களுக்கு பின்னர் வயலுக்குச் சென்றுள்ளார். அங்கு நபரொருவரின் சடலம் இருப்பதை அவதானித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார்.
தகவலையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பதுளை பொலிஸ் அதிகாரிகள், சடலத்தை மீட்டனர். உயிரிழந்தவர் சுமார் 65 வயது மதிக்கக்தக்க ஆண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.