இலங்கை
சாவகச்சேரியில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள்!
சாவகச்சேரியில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள்!
சாவகச்சேரி நகரசபையின் பேருந்து நிலைய வீதி மற்றும் நடைபாதை என்பவற்றின் புனரமைப்பு பணிகள் உபதவிசாளர் ஞா.கிஷோரினால் இன்றையதினம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உபதவிசாளரின் நகரை அழகுபடுத்தும் திட்டத்திற்கு அமைய பேருந்து நிலைய வீதி மற்றும் வீதியோடு இணைந்த நடைபாதை என்பன புனரமைக்கப்படவுள்ளது.
இன்று இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் நகராட்சி மன்ற உபதவிசாளர் ஞா.கிஷோர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், நகர முச்சக்கர வண்டிச் சங்கத்தினர், தனியார் சிற்றூர்திச் சங்கத்தினர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.