பொழுதுபோக்கு

சினிமாவில் ஜெயிக்க நிறம் முக்கிமல்ல; திறமை இருந்தால் போதும்: மார்கன் நடிகை ஓபன் டாக்!

Published

on

சினிமாவில் ஜெயிக்க நிறம் முக்கிமல்ல; திறமை இருந்தால் போதும்: மார்கன் நடிகை ஓபன் டாக்!

நீ கலராக இல்லை, சினிமாவில் உனக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று என்னிடம் பலர் சொன்னார்கள் என்று நடிகை சேஷ்விதா கனிமொழி கூறியுள்ளார்.தமிழில் சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான பரமசிவன் பாத்திமா, விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மார்கன் ஆகிய படங்களில் நடித்திரந்தவர் சேஷ்விதா கனிமொழி. தற்போது, குற்றம் புதிது என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், தான் திரையுலகிற்கு நுழைந்தது எப்படி என்பது குறித்து சேஷ்விதா கல்கி ஆன்லைனுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.இதில், மார்கன் திரைப்படத்தில் நெகடீவ் கேரக்டரில் நடித்த குறித்து பேசிய அவர், நிறம் என்ற விஷயத்தை நானும் சந்தித்தால் அந்த படத்தின் கேரக்டரில் ஒன்றி என்றால் நடிக்க முடிந்தது. சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால் சிவப்பு நிறம் இருக்க வேண்டும். ஆனால் உனக்கு அந்த நிறம் இல்லை. உன்னால் ஜெயிக்க முடியாது என்று சொன்னார்கள். ஆனால், நிறத்தை விட வெற்றி பெறுவதற்கு திறமை தான் முக்கியம். அதை வைத்து தான் தமிழ் ரசிகர்கள் என்னை அங்கீகரித்திருக்கிறார்கள்.எந்த கதை கேட்டாலும் எனக்கு முக்கியத்தும் இருக்கிறதா என்பதை பொறுத்து தான் நான் ஒப்புக்கொள்வேன். என் அப்பா அம்மா இருவருமே தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். பெங்களூரில் வளர்ந்த அக்மார்க் தமிழ்பொண்ணு நான். இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் தங்கள், லட்சியத்தை அடைய, விடா முயற்சி எடுக்கிறார்கள். இதற்கு அவர்களின் பெற்றோரும் உறுதுணையாக இருக்கிறார்கள். இப்படி இருந்தால் கண்டிப்பாக சாதிக்க முடியும்.குற்றம் புதிது திரைப்படம் ஒரு த்ரில்லர் கதையம்சம் கொண்ட படம். இந்த படத்தில் ஒரு அன்பான அப்பாவுக்கு மகளாக நடித்திருக்கிறேன். இந்த படத்தில் எனக்கு அப்பா கேரக்டரில் நடித்துள்ள நடிகர் மதுசூதன ராவை நான் அப்பா என்றுதான் அழைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version