இலங்கை

சிறுமியின் வாழ்வை சீரழித்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ; அதிரடி காட்டிய நீதிமன்றம்

Published

on

சிறுமியின் வாழ்வை சீரழித்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ; அதிரடி காட்டிய நீதிமன்றம்

சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் கூடிய கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று (26) உத்தரவிட்டார்.

 அத்துடன் சந்தேக நபருக்கு 20,000 ரூபாய் நீதிமன்றக் கட்டணமும் செலுத்த வேண்டும் என்றும், அந்தத் தொகையை செலுத்தத் தவறினால், அவருக்கு மேலும் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டது.

Advertisement

அதேநேரம் பாதிக்கப்பட்டவருக்கு 300,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறும், அந்தத் தொகையை அவர் செலுத்தத் தவறினால், அவருக்கு மேலும் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.

வெல்லம்பிட்டி கல்முல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுமியாக இருந்த பாதிக்கப்பட்டவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் மார்கம பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்ததாகவும், பாடசாலை முடிந்ததும் வேலை தேடி புறக்கோட்டைக்குச் சென்ற போது, சந்தேக நபர் 2012 மார்ச் 4 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாள் ஒன்றில் கடுவலை வெலிவிட்ட பகுதியில் உள்ள ஒரு உறவினரின் வீட்டிற்கு பாதிக்கப்பட்ட சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version