சினிமா

சிவகார்த்திகேயனோடு என்னை ஒப்பிட வேண்டாம்…!காந்தி கண்ணாடி குறித்து KPY பாலாவின் கருத்து!

Published

on

சிவகார்த்திகேயனோடு என்னை ஒப்பிட வேண்டாம்…!காந்தி கண்ணாடி குறித்து KPY பாலாவின் கருத்து!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகரும், தற்போது ஹீரோவாக களம் இறங்கியுள்ள KPY பாலா, தனது முதல் ஹீரோ பயணமான காந்தி கண்ணாடி படம் செப்டம்பர் மாதம் வெளிவரவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த படம், பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் மதராசி படத்துடன் ஒரே தேதியில் ரிலீசாக இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்த நேரத்தில், இரண்டு படங்களும் மோதுவது பற்றி ஒரு செய்தியாளர் “இது துணிச்சலான முடிவா?” என கேட்ட போது, பாலா நேர்மையாக பதிலளித்தார்: “நடிகர் சிவகார்த்திகேயனோடு என்னை ஒப்பிட வேண்டாம். அவர் இருக்கும் உயரம் வேறு, நான் இருக்கும் இடம் வேறு. நான் ஒரு பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறேன். அந்த உயரத்துக்கு அடிப்படை வெற்றிகள் தேவை.”மேலும், மதராசி படம் நிச்சயமாக வெற்றி பெறும் என தாம் நம்புவதாகவும், “அந்த படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் என் படத்துக்கு வருவார்கள்” என நண்பர்கள் மற்றும் படக்குழு தமக்கு ஆறுதல் வழங்கியதாகவும் கூறினார்.தன்னம்பிக்கையுடனும், நேர்த்தியான பதில்களுடனும் பேசும் KPY பாலா, தற்போது ரசிகர்கள் மத்தியில் வேறுபட்ட இடத்தைப் பிடிக்க முயற்சி செய்கிறார். இரண்டு படங்களும் வெற்றி பெற வாழ்த்துகள்!

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version