இலங்கை

செம்மணிப் புதைகுழி விவகாரம்:தமிழ்க் கட்சிகள் யாழில் இன்று முக்கிய சந்திப்பு!

Published

on

செம்மணிப் புதைகுழி விவகாரம்:தமிழ்க் கட்சிகள் யாழில் இன்று முக்கிய சந்திப்பு!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் இன்று(25) திங்கட்கிழமை ஒன்றுகூடிப் பேசவுள்ளன என்று தெரியவருகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் கூட்டாகவும், அதேநேரம் தனித்தனியாகவும் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளதுடன் பல்வேறு தீர்மானங்களையும் எடுத்திருக்கின்றன.

Advertisement

இவ்வாறான நிலையில் யாழ். நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று காலை தமிழ்க் கட்சிகள் பலவும் மீண்டும் ஒன்றுகூடவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஏற்பாட்டில் அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் இணைத் தலைவர்களும் அதேபோன்று ஏனைய சில கட்சிகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர் என்று தெரியவருகின்றது.

இந்தச் சந்திப்பின் முடிவில் தமிழ்க் கட்சிகள் இணைந்து இன்று மதியம் விசேட ஊடக சந்திப்பொன்றையும் நடத்தவுள்ளன.

Advertisement

 

 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version