உலகம்

டிரம்ப் மீது வழக்கு தொடரவுள்ள அமெரிக்க மத்திய வங்கி கவர்னர்

Published

on

டிரம்ப் மீது வழக்கு தொடரவுள்ள அமெரிக்க மத்திய வங்கி கவர்னர்

அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி கவர்னர் லிசா குக்கை பதவியில் இருந்து அதிபர் டிரம்ப் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார். லிசா மீது பல்வேறு குற்றச்சாட்டு இருப்பதால் அவரை பதவி நீக்கம் செய்ததாக டிரம்ப் தெரிவித்தார். 

இந்த நிலையில் தன்னை பதவி நீக்கம் செய்ததை எதிர்த்து டிரம்ப் நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர போவதாக லிசா குக் தெரிவித்து உள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக லிசாவின் வக்கீல் அபே லோவெல் கூறும்போது, மத்திய வங்கி ஆளுநர் லிசா குக்கை நீக்க அதிபர் டிரம்பிற்கு அதிகாரம் இல்லை.

ஒரு பரிந்துரை கடிதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவரை நீக்க டிரம்ப் மேற்கொண்ட முயற்சியில் எந்த சட்ட அடிப்படையும் இல்லை. இந்த சட்டவிரோத நடவடிக்கையை எதிர்த்து நாங்கள் வழக்குத் தாக்கல் செய்வோம் என்றார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version