இலங்கை
தங்கம் விலை சடுதி உயர்வு!
தங்கம் விலை சடுதி உயர்வு!
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை நேற்று பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தங்கநகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 2 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது. அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 252,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்பட்டது.