இலங்கை
தமிழகத்தில் இருந்து இலங்கை ஏதிலிகளை அனுப்புதல் நிறுத்தம்!
தமிழகத்தில் இருந்து இலங்கை ஏதிலிகளை அனுப்புதல் நிறுத்தம்!
தமிழகத்தில் இருந்து இலங்கையின் ஏதிலிகளைத் திருப்பியனுப்பும் செயற்பாடுகளை ஐக்கிய நாடுகளின் ஏதி லிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் நிறுத்தியுள்ளது என்று ”தி ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்குத் திரும்பிச்சென்ற நிலையில் குடிவரவுச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் குறைந்தது நான்கு ஏதிலிகள், அண்மைக்காலங்களில் தடுத்துவைக்கப்பட்டனர் என்று வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
குடியேற்ற விதிகளை மீறியதற்காக இலங்கை ஏதிலிகள் கைது செய்யப்படமாட்டார்கள் என்றும், கண்ணியத்துடன் நடத்தப்படுவார்கள் என்றும் இலங்கை அதிகாரிகளிடமிருந்து உத்தரவாதம் கிடைக்கும் வரை. அவர்களைத் திருப்பி அனுப்பும் செயல்முறை நிறுத்திவைக்கப்படும் என்று ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.