இலங்கை

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி சுற்றுவட்டார பகுதியில் நாய்கள் பிடிப்பு!

Published

on

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி சுற்றுவட்டார பகுதியில் நாய்கள் பிடிப்பு!

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி சுற்றுவட்டார நாய்கள் தொடர்பான நகரசபை நடவடிக்கை
வல்வெட்டித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய சுற்றுவட்டாரத்தில் கடந்த சில நாட்களாகக் காணப்பட்ட கட்டாக்காலி நாய்கள் குறித்து பக்தர்களும், பொதுமக்களும் அச்சத்துடன் முறைப்பாடுகளை முன்வைத்தனர். 

மக்கள் பாதுகாப்பையும், ஆலய சுற்றுப்புறத்தின் சுத்தத்தையும் கருத்தில் கொண்டு, நகரசபையின் சுகாதாரப் பிரிவு துரிதமாக நடவடிக்கை எடுத்து, அந்த நாய்களை பாதுகாப்பான முறையில் அகற்றியது.
இந்த செயல் ஒரு நிர்வாகப் பொறுப்பாக மேற்கொள்ளப்பட்டாலும், அந்த உயிர்களும் படைப்பின் ஓர் அங்கமே என்பதையும் மறக்கக்கூடாது. 

Advertisement

அவை மனிதர்களின் அன்பும், இரக்கமும் தேடி வந்து சேர்ந்தவை. உணவு, தஞ்சம், அன்பு – இவை எதையும் கேட்காமல், “வாயில்லா உயிர்கள்” என அழைக்கப்படும் இந்நாய்கள் நம் கருணை பார்வைக்காக மட்டுமே காத்திருக்கின்றன.

 வாயில்லா உயிர்களுக்கு துன்பம் செய்யாதீர்கள்.
அவையும் சந்தியின் படைப்புகள்; நம்மிடம் “தஞ்சம்” என வந்துள்ள உயிர்கள்.
ஒரு சமூகத்தின் உயர்வு, அது எவ்வாறு தனது பலவீனமானவர்களை – மனிதரை மட்டுமல்லாது, விலங்குகளையும் – அணுகுகிறது என்பதில் தெரிகிறது. 

ஆகவே, நாம் அனைவரும் இரக்கத்துடனும், அன்புடனும், கருணையுடனும் இவ்வுயிர்களை அணுகுவோம்.
மனிதன் காட்டும் கருணை தான் மனிதநேயத்தின் உன்னதப் பரிமாணம்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version