இலங்கை

நகரசபையினருடன் பெண் வாய்த்தர்க்கம்; பொலிஸார் எச்சரிக்கை!

Published

on

நகரசபையினருடன் பெண் வாய்த்தர்க்கம்; பொலிஸார் எச்சரிக்கை!

சாவகச்சேரி நகரசபையினருடன் தகாத வார்த்தைகளில் பேசி வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு நகரசபையின் அபிவிருத்திப் பணிகளில் இடையூறு விளைவிக்கக்கூடாது எனப் பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்; சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர், உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உப்புக்கேணிக்கு களவிஜயம் மேற்கொண்டபோது பெண்ணொருவர் நகரசபையினரைத் தகாத வார்த்தைகளில் பேசியதோடு வீடியோ பதிவுசெய்துள்ளார்.

Advertisement

இதன்போது உபதவிசாளர் கிஷோர் உறுப்பினர்களோடு மரியாதையோடு நடந்துகொள்ளுமாறும் நகரசபையின் பணிகளில் தலையிட வேண்டாம் எனவும் குறித்த பெண்ணை எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் உபதவிசாளர் கிஷோர் மற்றும் வட்டார உறுப்பினர் பிரணவராசா ஆகியோர் தன்னை அச்சுறுத்தி தொலைபேசியைப் பறித்ததாக குறித்த பெண் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

அதனையடுத்து உபதவிசாளர் கிஷோர் மற்றும் உறுப்பினர் பிரணவராசா ஆகியோர் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட நிலையில் முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, நகரசபையின் அபிவிருத்திப் பணிகளிலும் உறுப்பினர்களின் பணிகளிலும் குறித்த பெண் தலையிட முடியாது என்றும் அபிவிருத்திப் பணிகளில் குறைபாடு இருந்தால் நகரசபைக்கு எழுத்துமூலமாக அறிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தி விசாரணைகளை முடிவுறுத்தினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version