இலங்கை
நாட்டிற்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்!
நாட்டிற்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்!
இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 166,000 ஐ தாண்டியுள்ளது.
குறித்த விடயம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபையின் சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, இந்த மாதம் இதுவரை 166,766 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களில் 38,456 சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.
பிரித்தானியா, இத்தாலி, ஜெர்மனி மற்றும் சீனாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15,305,054 ஆகும்.