இலங்கை

நாய்களுக்கு விஷம் வைத்து கொலை – கிராம மக்கள் கடும் அதிருப்தி!

Published

on

நாய்களுக்கு விஷம் வைத்து கொலை – கிராம மக்கள் கடும் அதிருப்தி!

குருநாகலில் நீண்ட காலமாக வசித்து வந்த, 2 கர்ப்பிணி நாய்கள் உட்பட 8 நாய்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏரி சுற்றுவட்ட பகுதியில் வசிக்கும் ஒரு பிரபல வர்த்தகர் மற்றும் ஒரு குழு அளித்த முறைப்பாடு தொடர்பாக, பொலிஸாரால் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

Advertisement

யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல், குடியிருப்பாளர்களிடமிருந்து அன்பையும் பராமரிப்பையும் பெற்று வந்த நாய்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் அப்பகுதி மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.

விலங்கு நல சங்கங்களும் இது தொடர்பாக தங்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.

கைது செய்ய கோரப்பட்ட 2 சந்தேகநபர்களும் ஏரி சுற்றுவட்ட பகுதிக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் வசிக்கும் இரண்டு சகோதரர்களாகும்.

Advertisement

அவர்கள் சட்டவிரோதமாக கால்நடைகளைக் கடத்துபவர்கள் எனவும் இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 13 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படும் இரண்டு சந்தேகநபர்களும், எட்டு நாய்களுக்கு விஷம் கலந்த மாட்டிறைச்சித் துண்டுகளை உணவாகக் கொடுத்து கொன்றதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அந்தப் பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளிலிருந்து 2 சந்தேகநபர்களும் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Advertisement

அந்த பகுதியில் உள்ள காணிகளில் இரவில் தாங்கள் கொண்டு வரும் மாடுகளை இருவரும் சட்டவிரோதமாக அனுமதியின்றி வைத்திருப்பதாகவும், அதன் போது நாய்கள் தொந்தரவு செய்ததால் அவற்றை விஷம் வைத்து கொன்றிருக்கலாம் எனவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version