பொழுதுபோக்கு
நீங்க இந்த சீன்ல பேசவே கூடாது; நாகேஷ்க்கு கண்டிஷன் போட்ட உதவி இயக்குனர்: அபூர்வ சகோதரர்கள் மெமரீஸ்!
நீங்க இந்த சீன்ல பேசவே கூடாது; நாகேஷ்க்கு கண்டிஷன் போட்ட உதவி இயக்குனர்: அபூர்வ சகோதரர்கள் மெமரீஸ்!
கமல்ஹாசன் 3 வேடங்களில் நடித்து அசத்திய அபூர்வ சகோதரர்கள் படத்தில், வில்லனாக நடித்த நாகேஷ் தேவையில்லமல் ஒரு வசனத்தை பேச போக, அதை பேச வேண்டாம் என்று தடுத்ததால், தனக்கும் அவருக்கும் மோதல் எழுந்தது என்று இயக்குனர் ராசி அழகப்பன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.இது குறித்து அவர் வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடிக்க நாகேஷ் சாருக்கு கதை சொல்ல கமல் சார் என்னைத்தான் அனுப்பினார். என்னை பார்த்தவுடன், நாகேஷ் சார் என்ன வில்லனா என்று கேட்க, இல்லை சார் கேரக்டர் என்று நான் சொன்னேன். நல்ல பேசுற என்று நாகேஷ் என்னிடம் சொன்னார். நாகேஷ் சார், ஒரு பெரிய நடிகர், அவரைப் பற்றி எனக்கு மரியாதை இருந்தது. கமல் சாருக்கும் அவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. அதனால், சில விஷயங்களில் கமல் சார் அவரை வியந்து பார்ப்பார்.கதை சொல்லி படப்பிடிப்பு தொடங்கி முடிந்துவிட்டது. டப்பிங் பணிகள் வரும்போது, அப்பா கமல்ஹாசன் சேதுபதி கேரக்டர் அந்த 3 வில்லன்களையுளும் கைது செய்து அழைத்து வருவார். அப்போது யாரும் பேச கூடாது. பின்னணி இசை மட்டும் போகும். இதுதான் தையின் உயிர்நாடி. இந்த சீன் வரும்போது ஒன்னும் இல்ல, எங்கள் மூவரையும் நீச்சல் குளம் திறப்பதற்காக கூட்டி செல்கிறார் என்று நாகேஷ் வசனம் பேசினார். அதை பார்த்து நான், சார் நீங்க இந்த இடத்தில் பேச கூடாது என்று சொன்னேன் அவர் என் பேச்சை கேட்கவில்லை.நான் டப்பிங் பேசிக்கொள்கிறேன். ரெக்கார்டு பண்ணிக்கோ, தேவை என்றால் வச்சிக்கோ இல்லனா வேண்டாம் என்று சொன்னார். அதை கேட்டு நான் சார் நீங்க இந்த இடத்தில் பேசவே கூடாது என்று சொன்னபோது நான் நாகேஷ்டா என்கிட்டயேவா என்று கேட்டார், சார் நீங்க பேசவே கூடாது அவ்வளவு தான் என்று சொன்னேன். நான் பேசவே கூடாது என்றால், டப்பிங் பண்ணமாட்டேன் என்று சொன்னார். பரவாயிவல்லை என்று நான் சொன்னபோது டப்பிங் நிறுத்தப்பட்டது. ஏ.வி.எம்.தியேட்டரில் இருந்து கமல் சாருக்கு போன் போனது.A post shared by Wow Tamizhaa (@wowtamofficial)கமல் சார் வந்து என்ன நடந்துது என்று கேட்டுவிட்டு, என்னிட்டம் பாத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார், மீண்டும் டப்பிங் பணிகள் தொடங்கியது. நாகேஷ் சார் மீண்டும் அதே வசனத்தை பேசினார். நான் மீண்டும் தடுத்தேன். அதன்பிறகு அவர் கோபமாக, அடுத்த ரீலை கடந்து டப்பிங் பேசி முடித்தார். அப்போது யாருக்கும் அது சரியாக தெரியவில்லை. என்னை அடமெண்ட் என்று சொன்னார்கள். ஆனால் படம் ரிலீஸ் ஆகி வெள்ளி விழா கொண்டாடும்போது நாகேஷ் சார் என்னை பாராட்டினார் என்று ராசி அழகப்பன் கூறியுள்ளார்.