இலங்கை

நீதித்துறைச் செயற்பாடுகளில் அரசு தலையிடவில்லை; அமைச்சர் நளிந்த தெரிவிப்பு!

Published

on

நீதித்துறைச் செயற்பாடுகளில் அரசு தலையிடவில்லை; அமைச்சர் நளிந்த தெரிவிப்பு!

அரசாங்கம் எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கைகளிலும் தலையிடவில்லை என்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது குறித்து யூரியூபர் ஒருவர் முன்கூட்டியே தெரிவித்த கருத்துகள் தொடர்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 

Advertisement

அவர் மேலும் தெரிவிக்கையில்; அனைத்து நிறுவனங்களும் சுயாதீனமாக விசாரணைகளை மேற்கொள்ள இடம் வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவது மட்டுமே அரசாங்கத்தின் பொறுப்பு. நிதி மோசடி, குற்றம் அல்லது ஊழல் என எதுவாக இருந்தாலும், விசாரணைகள் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக நடத்தப்படுகின்றன. சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்தும் என்பதற்கு இந்த வழக்கை ஓர் உதாரணமாகக் காணலாம் – என்றார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version