இலங்கை
நீதிமன்ற விடயங்களில் தலையிடப்போவதில்லை; எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு!
நீதிமன்ற விடயங்களில் தலையிடப்போவதில்லை; எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு!
ரணில் விக்கிரமசிங்க விடயத்தில் நீதிமன்ற விவகாரங்களில் நாம் தலையிடவில்லை. நீதிமன்றம் ஊடாக நீதிகிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று இரண்டாவது நாளாக சஜித் நேரில் சென்று பார்வையிட்டார். அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
நாட்டில் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையைப் பாதுகாக்கவேண்டும் . சட்டமென்பது நீதியாகச் செயற்படுகின்றது என்பது தென்பட வேண்டும்.எமது நாட்டு நீதிமன்றக் கட்டமைப்பை நாம் மதிக்கின்றோம். அது சுயாதீனமாகச் செயற்படுகின்றது என நம்புகின்றோம். ஆனால் நீதிமன்ற நடவடிக்கைக்கு முன்பாக தீர்ப்புத் தொடர்பில் சிலர் கருத்து வெளியிடுவது தான் சிக்கலாகியுள்ளது. அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். நாட்டு மக்கள் அநீதியை எதிர்க்கின்றனர். நீதிக்காக ஒன்றுகூடும் உரிமை அவர்களுக்கு உள்ளது. அநீதிக்கு எதிராக எமது நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுவது வழமையானது-என்றார்.