இலங்கை

நெருக்கமான உறவினரால் நடந்த கொடூரம் ; 12 வயதான சிறுமி பாலியல் வன்புணர்வு

Published

on

நெருக்கமான உறவினரால் நடந்த கொடூரம் ; 12 வயதான சிறுமி பாலியல் வன்புணர்வு

12 வயதும் 11 மாதங்களேயான ஒரு சிறுமி கடுமையான பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மொனராகலை, கோணக்கங்ஹார பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜயமஹா பிரதேசத்தில் வசிக்கும் சிறுமியே இவ்வாறு கடுமையான பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Advertisement

சிறுமியை கடுமையான பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்து ஆதரவு வழங்கியது மற்றும் குற்றத்தை மறைத்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ், அந்த சிறுமியின் பாட்டியை (வயது 81) கோணக்கங்ஹார பொலிஸார், செவ்வாய்க்கிழமை (26) கைது செய்தனர்.

சிறுமியின் தாய் வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார். அந்த சிறுமி, தனது தாயின் இரண்டாவது கணவர் மற்றும் பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார்.

தாயின் இரண்டாவது கணவர், ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி மதுபானத்தை அருந்தியுள்ளார். அப்போது வீட்டில் பாட்டி இல்லை.

Advertisement

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வீட்டுக்குள் ஓர் அறைக்குள் சிறுமியை இழுத்துச் சென்று, கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

பொலிஸாருக்கு செவ்வாய்க்கிழமை (26) இரவு 7.30 மணிக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அன்றிரவே பாட்டியின் வீட்டுக்கு விரைந்த பொலிஸார், 81 வயதான பாட்டியை கைது செய்துள்ளார்.

இதேவேளை, அந்த சிறுமியின் சித்தப்பாவும் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்த பொலிஸார், இருவரையும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version