இலங்கை

பதவிக்கு வந்து ஓராண்டு நிறைவு; வடக்கில் பல திட்டங்களை ஆரம்பிக்க வருகிறார் அநுர!

Published

on

பதவிக்கு வந்து ஓராண்டு நிறைவு; வடக்கில் பல திட்டங்களை ஆரம்பிக்க வருகிறார் அநுர!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்து அடுத்த மாதம் ஒரு வருடம் நிறைவடையவுள்ள நிலையில், எதிர்வரும் முதலாம் திகதி முதல் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்தவுள்ளது. இந்தச் செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் முதலாம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ளார். அந்தப் பயணத்தில் யாழ்ப்பாணத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு அடிக்கல் நடுதல், யாழ்ப்பாணம் கடவுச்சீட்டு அலுவலகத் திறப்புவிழா, மயிலிட்டித் துறைமுகத்தை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கை என்பன அவரது வடக்கு வருகையின்போது முன்னெடுக்கப்படவுள்ளன.

Advertisement

யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்துக்கும் ஜனாதிபதி சென்று அங்கு மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயவுள்ளார்.

எதிர்வரும் 2ஆம் திகதி முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் தென்னை முக்கோண வலய புதிய வேலைத்திட்டம் ஆரம்பித்தல், வட்டுவாகல் பாலத்துக்கான அடிக்கல் நடுதல் என்பனவும் ஜனாதிபதியின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்படவுள்ளன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version