இலங்கை

பன்றிகளால் ஒருபோதும் நரியை வீழ்த்தமுடியாது;

Published

on

பன்றிகளால் ஒருபோதும் நரியை வீழ்த்தமுடியாது;

ரணிலின் கைது தொடர்பில் ஹிருணிகா ஆவேசம்
 
பன்றிகளால் நரியை ஒருபோதும் கொல்லமுடியாது. ஆதலால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தவறான இடத்தில் கைவைத்துள்ளது – இவ்வாறு ரணிலின் கைது தொடர்பில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-
ரணிலுடன் எனக்கு அரசியல் ரீதியிலான கருத்து மோதல்கள் இருக்கலாம். அதற்காக, அவருக்கு இவ்வாறான அநீதி இழைக்கப்படும் போது வேடிக்கை பார்க்க முடியாது. தேசிய மக்கள் சக்தி செய்துள்ள தவறின் பார தூரம் விரைவில் தெரியவரும்.

Advertisement

ரணில் உட்பட முன்னாள் ஜனாதிபதிகள் நாட்டுக்கு ஆற்றிய சேவைகளின் ஒரு சதவீதத்தையேனும் தற்போதைய அரசாங்கம் ஆற்றவில்லை என்பதே உண்மை. ரணில் விக்கிரமசிங்கவின் கைது நடவடிக்கை திட்டமிட்ட அரசியற் பழிவாங்கல் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. எனவே, ரணிலைக் காப்பாற்றுவதற்காக அரசியற் பேதங்களைக் கடந்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணையவேண்டும் – என்றார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version