இலங்கை
பயிர்களைப் பாதுகாக்க விவசாயிகளுக்கு துப்பாக்கிகள் வழங்கிவைப்பு!
பயிர்களைப் பாதுகாக்க விவசாயிகளுக்கு துப்பாக்கிகள் வழங்கிவைப்பு!
திருகோணமலை மாவட்டத்தில் அறுவடை காலத்தில் காட்டு விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக காற்றழுத்த துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதற்கான நிகழ்வும், துப்பாக்கியை இயக்குவது தொடர்பான பயிற்சியும் நேற்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றன.
ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா மற்றும் மாவட்ட அரச அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார ஆகியோரின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, 2025 ஆம் ஆண்டின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் கீழ், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட துப்பாக்கிகள், காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல் உள்ள 06 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள விவசாய சங்கங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
பட்டினமும் சூழலும், குச்சவெளி, தம்பலகாமம், கோமரங்கடவல, சேருவில மற்றும் மூதூர் ஆகிய பிரதேச செயலகங்களுக்குமாக 153 காற்றழுத்த துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் துப்பாக்கிகளை இயக்குவது குறித்த, பயிற்சியும் பிரதேச செயலகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.