சினிமா
பரோட்டா சூரியின் அடுத்த லெவல் – ஹீரோவாக 10 கோடி சம்பள டீல்..!
பரோட்டா சூரியின் அடுத்த லெவல் – ஹீரோவாக 10 கோடி சம்பள டீல்..!
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் நடிகர் சூரி. அவர் திரைப்படமொன்றில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்து பிரபலமானதால் பரோட்டா சூரி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயனுடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் நடித்து முக்கிய காமெடி நடிகராக மாறினார். கிராமத்து படங்கள் என்றாலே சூரி அதில் காமெடி நடிகராக இருப்பார்.நகைச்சுவை நடிகர் என்பதையும் தாண்டி நாயகனாக உயர்ந்திருப்பவர் சூரி. அவர் நாயகனாக நடித்து இந்த வருடம் வெளிவந்த ‘மாமன்’ படமும் வியாபார ரீதியாக வெற்றி 40 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தற்போது ‘மண்டாடி’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு நாயகனாக நடிக்க சில கதைகளைக் கேட்டுள்ளாராம். அவரை நாயகனாக வைத்து படம் தயாரிக்க சில தயாரிப்பு நிறுவனங்களும் தயாராக இருக்கிறார்களாம். ஆனால், சூரி கேட்கும் சம்பளம் அவர்களை யோசிக்க வைத்துள்ளதாக திரையுலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.அதாவது நாயகனாக நடிக்க 10 கோடி முதல் 15 கோடி வரை சம்பளம் கேட்கிறாராம் சூரி. தான் நாயகனாக நடித்த படங்கள் நல்ல வசூலைப் பெற்றதால் கேட்கிறேன் என்றும் சொல்கிறாராம். இதேவேளை தியேட்டர் வசூல், ஓடிடி, சாட்டிலைட் உரிமை என அனைத்துமே விற்கப்படுவதும் ஒரு காரணம் என்கிறார்கள். இருந்தாலும் அவ்வளவு சம்பளம் கொடுத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் தயங்கி வருகிறார்கள்.எனவே, சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து அதில் தனக்குப் பிடித்த, பொருத்தமான கதைகளைத் தயாரித்து நடிக்கலாம் என சூரி திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.இதற்கு முன்பு அவர் நாயகனாக நடித்து வெளிவந்த ‘கருடன், மாமன்’ ஆகிய படங்களை சூரியின் மேனேஜர் தயாரித்தார். இப்போது சூரியே தயாரிப்பில் இறங்குவது சிலருக்கு ஆச்சரியத்தைத் தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.