இலங்கை

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கொழும்பின் பிரதி பொலிஸ்மா அதிபர் கைது!

Published

on

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கொழும்பின் பிரதி பொலிஸ்மா அதிபர் கைது!

கொழும்பிற்குப் பொறுப்பான துணைப் பொலிஸ்மா அதிபர் உதித்த லியனகே, புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் –  திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில், அவருடைய  மனைவி மற்றும் ஏழு பேர் புதையல் எடுக்க முயற்சித்த குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

Advertisement

இதை தொடர்ந்து தாம் பிரதி பொலிஸ்மா அதிபர் என்றும், தமது மனைவியை உடனடியாக விடுவிக்குமாறும் அநுராதபுரம் பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்தது.

இதன்போது பொலிஸ்மா அதிபர்  புதையல் தோண்டப்பட்டதாகக் கூறப்படும் இடத்திற்கு சென்றமைக்கான ஆதாரங்கள் , தொலைபேசி ஆய்வுகள், சிசிடிவி கெமரா காட்சிகளை அடிப்படையாக கொண்டு  அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

இவ்வாறு கைது செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட உள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version