இலங்கை

பொது ஒழுங்கைப் பராமரிக்க பொலிஸாருக்கு அறிவுறுத்தல்!

Published

on

பொது ஒழுங்கைப் பராமரிக்க பொலிஸாருக்கு அறிவுறுத்தல்!

கொழும்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் பொது ஒழுங்கைப் பராமரிக்கவும், எந்தவித இடையூறுகளைத் தடுக்கவும் நகரத்தில் உள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏதேனும் வன்முறை ஏற்பட்டாலோ அல்லது சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராகவோ சட்ட நடவடிக்கை எடுக்கத் தெளிவான அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்ததுள்ளது.

Advertisement

கோட்டை நீதிவான் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சிறப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக எந்தவொரு அமைதியின்மைக்கும் விரைவாகப் பதிலளிக்க கலகத்தடுப்புப் படைகள் மற்றும் கூடுதல் பொலிஸ் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version