இலங்கை
பொருண்மியத்தில் நலிவுற்ற 108 இணையர்களுக்கு சந்நிதியில் திருமணம்!
பொருண்மியத்தில் நலிவுற்ற 108 இணையர்களுக்கு சந்நிதியில் திருமணம்!
யாழ். வணிகர் கழகத் தலைவர் தெரிவிப்பு
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில், நாளைமறுதினம் 28ஆம் திகதி ஒரேநாளில் 108 திருமணங்களை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தலைவர் ஜெயசேகரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது:- தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் நாளைமறுதினம் 28ஆம் திகதி காலை 10 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரையான சுபவேளையில் 108 திருமணங்கள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான 108 தாலி, கூறைச் சாறி, வேட்டி சால்வை மற்றும் இதர செலவுகள் அனைத்தும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டு சிங்கப்பூரில் வசித்து வருகின்ற துரை சுமதி குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 15 பிரதேசசெயலகங்கள் ஊடாக வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த திருமணத்தம்பதிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கே திருமணம் நடத்திவைக்கப்படவுள்ளது – என்றார்.