இலங்கை
மண்டைதீவு படுகொலைகள்; அஞ்சலி உணர்வுபூர்வம்
மண்டைதீவு படுகொலைகள்; அஞ்சலி உணர்வுபூர்வம்
யாழ்ப்பாணம் தீவகப் பகுதிகளில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொல்லப்பட்டோரின் 35ஆவது அஞ்சலி நிகழ்வு மண்டைதீவில் நேற்று உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது.
1990ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது. மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த எண்பதுக்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் இராணுவத்தால் கடத்தப்பட்டுக்காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பலர் படுகொலை செய்யப்பட்டு, சடலங்கள் மண்டைதீவு பகுதியில் உள்ள சில கைவிடப்பட்ட கிணறுகளில் வீசப்பட்டன. இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் 35ஆவது ஆண்டு நினைவேந்தலே நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இராணுவத்தால் தீவகத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு வாழும் சாட்சிகள் உள்ளனர் என்றும், அவர்களின் தகவலுக்கு அமைய அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வேலணை பிரதேசசபையில் அண்மையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.