பொழுதுபோக்கு
மதராஸி படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவங்க, இந்த படத்துக்கு வாங்க: ‘காந்தி கண்ணாடி’ விழாவில் பாலா பேச்சு!
மதராஸி படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவங்க, இந்த படத்துக்கு வாங்க: ‘காந்தி கண்ணாடி’ விழாவில் பாலா பேச்சு!
நான் முதலில் ஹீரோ ஆக வேண்டும் என்று சொன்னவர் லாரண்ஸ் மாஸ்டர். ஆனால் ஷூட்டிங் காரணமாக அவரால் இன்றுவர முடியவில்லை என்று கூறியுள்ள கே.பி.ஒய் பாலா, மதராஸி படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் இந்த படத்தை பாருங்கள் என்று கூறியுள்ளார்.சின்னத்திரையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கே.பி.ஒய்.பாலா. தனது காமெடியான ஒன்லைனர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை வெள்ளித்திரையில் நடித்து வந்தாலும், பாலா சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.மலை கிராம மக்களுக்கு உதவும் வகையில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார். கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் நடிகர்கள் இவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று, சினிமா விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பாலாவின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் திரை நட்சத்தரங்கள் பலரும் பாலாவின் செயலுக்கு உதவி வருகின்றனர்.இதனிடையே கே.பி.ஒய் பாலா, காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். 2018-ம் அண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜூங்கா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், புலிக்குத்தி பாண்டி, லாபம், நாய் சேகர், உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் காமெடியனாக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான, சென்னை சிட்டி கேங்ஸ்டர் பாடத்தில் நடித்திருந்த பாலா, நாயகனாக நடித்துள்ள காந்தி கண்ணாடி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ந் தேதி வெளியாக உள்ளது. நமிதா கிருஷ்ணமூர்ததி நாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய பாலா, லாரண்ஸ் மாஸ்டர் தான் நான் ஹீரோ ஆக வேண்டும் என்று முதன் முதலில் சொன்னார், பட ஷூட்டிங் காரணமாக அவரால் இந்த விழாவுக்கு வர முடியவில்லை. செப்டம்பர் 5-ந் தேதி அண்ணன் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படம் வெளியாகிறது என்பது எனக்கு தெரியாது. செப்டம்பர் 5 என்று சொன்னவுடன் நான் ஓகே என்று சொல்லிவிட்டேன். அதன்பிறகு தான் மதராஸி படம் வெளியாவது தெரிந்தது, அண்ணன் படம் வெளியாகும்போது நம்ம படம் எப்படி என்று யோசனையாகவே இருந்தது.அதே சமயம், மதராஸி படத்திற்கு டிக்கெட் கிடைக்காத 10 பேர் நம்ம படத்திற்கு வருவார்கள் என்று இயக்குனர் என்னிடம் சொன்னார். சிவா அண்ணன் படம் கண்டிப்பா ஜெயிச்சுடும். அதில் மாற்றம் இல்லை. நாங்கள் முதன் முதலில் வருகிறோம் எங்கள் படமும் ஜெயிக்க வேண்டும் என்று பாலா கூறியுள்ளார்.