சினிமா

“மதராஸி” படம் வெளியீட்டில் தடுமாறல்… படக்குழு எடுத்த முடிவு என்ன தெரியுமா.?

Published

on

“மதராஸி” படம் வெளியீட்டில் தடுமாறல்… படக்குழு எடுத்த முடிவு என்ன தெரியுமா.?

பெரிய படங்களின் வெளியீட்டைச் சுற்றி ஏற்படும் விறுவிறுப்புகள் என்றுமே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தும். தற்போது அதுபோன்ற ஒரு சூழ்நிலையே உருவாகியுள்ளது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் “மதராஸி” படத்திற்கு ஏற்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “அமரன்” படம் எதிர்பார்த்ததை விட சிறந்த வரவேற்பை பெற்று வசூலில் புதிய உயரங்களை எட்டியது. இந்த வெற்றியால் தயாரிப்பாளர்கள் மட்டும் அல்லாமல் விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் எதிர்கால படங்களின் மதிப்பீட்டில் அதிரடி முடிவினை எடுத்துக்கொண்டுள்ளனர்.அந்த வரிசையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள “மதராஸி” படத்திற்கான தியட்டர் உரிமை விலை “அமரன்” படத்தின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இந்த விலை பருவத்துக்கு அதிகமாகும் என்பதால் தான் தற்போது பல விநியோகஸ்தர்கள் முன்வர தயாராக இல்லை என்பது முக்கியக் குறிப்பாகத் தெரிவிக்கப்படுகிறது.தற்போது கிடைத்த தகவலின்படி, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று முக்கிய மாநிலங்களில் மதராஸி படத்தின் தியட்டர் உரிமை பெற எந்த ஒரு முக்கிய விநியோகஸ்தரும் முன்வரவில்லை. இதற்கு முக்கியக் காரணம், தயாரிப்பாளர் நிர்ணயித்துள்ள உரிமை விலை அதிகமாக இருப்பதாகும்.சில விநியோகஸ்தர்கள், படத்தின் மீதான நம்பிக்கை இருந்தபோதிலும், தற்போதைய திரையரங்க சூழ்நிலை, போட்டி மற்றும் மற்றொரு பக்கம் ஓடிடி வெளியீட்டின் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்த விலையில் படம் வசூலை மீட்டெடுக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கலாம் என கருதுகிறார்கள். மதராஸி பட தயாரிப்பாளர் தியட்டர் உரிமை விலையை குறைப்பாரா? என்ற கேள்வி பல இடங்களில் எழுந்துள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version