இலங்கை

மன்னாரில் காணிகளை மீண்டும் வழங்க அரசாங்கம் திட்டம்

Published

on

மன்னாரில் காணிகளை மீண்டும் வழங்க அரசாங்கம் திட்டம்

மன்னார் மற்றும் பூநகரியில் உள்ள இரண்டு காற்றாலை மின் திட்டங்களிலிருந்து இந்தியாவின் அதானி நிறுவனம் விலகிய நிலையில், சர்வதேச விலைமனு கோரல் மூலம் வேலைத்திட்டங்களுக்காக அந்த காணிகளை மீண்டும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

மன்னாரில் 250 மெகாவோட் மற்றும் பூநகரியில் 234 மெகாவோட் திட்டங்களுக்கு அதானி நிறுவனத்திற்குச் காணிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

Advertisement

தற்போது அந்த காணிகளை வேறொரு நிறுவனத்திற்கும் வழங்க முடியும் என்றும், பொருத்தமான விலையில் விலைமனுவை சமர்ப்பிக்கும் நிறுவனத்திற்கு அவை ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மன்னார் தீவில் இந்த திட்டத்துக்கு உள்ளூர் மக்களின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், பூநகரி திட்டம் தொடர்பாக பரிமாற்ற சிக்கல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version