இலங்கை

மன்னார் காற்றாலை திட்டத்தை இடைநிறுத்த தீர்மானம்!

Published

on

மன்னார் காற்றாலை திட்டத்தை இடைநிறுத்த தீர்மானம்!

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டப் பணிகளை இடைநிறுத்துவதற்கு மின்சாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு சகல தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காண்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அபிவிருத்தித் திட்டப் பணிகளை இடைநிறுத்துவதற்கு மின்சாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

காற்றாலை மின்னுற்பத்தித் திட்ட விவகாரம் தொடர்பில் இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சில் ஈடுபடுபதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் மற்றும் இல்மனைட் கனிய வளம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று விசேட கலந்துரையாடல் மின்சாரத்துறை அமைச்சர் அருண கருணாதிலக தலைமையில் இடம்பெற்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version