இலங்கை
மன்னார் மடு அன்னைக்கு இன்று திருவிழா; நற்கருணைப் பெருவிழா நேற்று பக்திபூர்வம்
மன்னார் மடு அன்னைக்கு இன்று திருவிழா; நற்கருணைப் பெருவிழா நேற்று பக்திபூர்வம்
இலங்கையின் பிரபல வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான, மன்னார் மடு அன்னையின் வருடாந்தத் திருவிழாத் திருப்பலி இன்று காலை 6.15 மணியளவில் ‘கூட்டுத் திருப்பலியாக’ ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
மன்னார் மறைமாவட்ட ஆயர், வெளிமாவட்ட ஆயர்கள் இணைந்து இந்தத் திருவிழாத் திருப்பலியை ஒப்புக்கொடுக்கவுள்ளனர். மடு அன்னையின் திருவிழாவுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரம் பக்தர்கள் குழுமியுள்ளனர். இந்த நிலையில், திருவிழாத் திருப்பலிக்கு முதல் நாள் கொண்டாடப்படும் நற்கருணைப் பெருவிழாவும் ஆராதனைகளும் நேற்று இரு மொழிகளிலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.