இலங்கை
மருத்துவக் காரணங்களாலேயே ரணிலுக்குக் கிட்டியது பிணை!
மருத்துவக் காரணங்களாலேயே ரணிலுக்குக் கிட்டியது பிணை!
300க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலை
ரணில் விக்கிரமசிங்கவுக்குநேற்றுப் பிணை வழங்கப்பட்டாலும், மருத்துவக் காரணங்களாலேயே இந்தப்பிணை சாத்தியமானது என்று தெரியவருகின்றது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் ரணில் சிகிச்சை பெற்றுவருகின்றார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருந்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில் ழுமையான மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அதில் இதயத்துக்கான மூன்று வால்வுகளில் அடைப்புகள் ஏற்பட்டுள்ளன.
அவற்றில் ஒன்று முழுமையாக அடைபட்டுள்ளது. ஏனைய இரண்டும் பகுதியளவில் அடைபட்டுள்ளன. இதயத்துக்கு மிகவும் அண்மித்த பகுதியில் இந்த அடைப்புகள் ஏற்பட்டுள்ளதால், சத்திரசிகிச்சை செய்யமுடியாது.
அத்துடன், உடலில் இதய திசுக்களின் இறப்பு, சிறுநீரகநோய், அதிக ஆபத்துள்ள நீரிழிவு நோய், சோடியத்தின் இருப்பிழப்பு, உயர் குருதி அழுத்தம் ஆகிய நோய்களும் ரணிலுக்கு இருப்பதாகக் கூறப்பட்டது. இவற்றின் அடிப்படையிலேயே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் ரணிலுக்கு ஆதரவாக 300க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.