இலங்கை
மருந்துக் கொள்வனவுக்காக ரூ.3,500 மில்லியன் ஒதுக்கீடு!
மருந்துக் கொள்வனவுக்காக ரூ.3,500 மில்லியன் ஒதுக்கீடு!
தற்போதைய மருந்துப் பற்றாக்குறையை சமாளிக்க, பிராந்தியக் கொள்முதல்களுக்காக மருத்துவமனைகளுக்கு 3 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்; கடந்த ஆண்டு விலைமனுக்கோரல் இல்லாததன் விளைவாகவே சில மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விலைமனுக்கோரல் விடப்பட்டிருந்தால், மருந்துகள் சரியாகக் காணப்பட்டிருக்கும். அடுத்த ஆண்டுக்கு விலைமனுக்கோரல் விட்டுள்ளோம். அவ்வப்போது சில நாடுகளுடன் பேச்சு நடத்தி, மருந்துகளை நன்கொடையாகப் பெறுகிறோம். சில நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிலையை அடைந்து விட்டோம், எனவே இந்தப் பிரச்சினையை நாம் எதிர்கொள்ளமுடியும் – என்றார்.