இலங்கை
மீன் வியாபாரியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!
மீன் வியாபாரியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!
கம்பஹா, பேலியகொடை, ஞானரத்ன மாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று காலை (19) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேலியகொடை, ஞானரத்ன மாவத்தை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் பேலியகொடை மீன் சந்தையில் பணிபுரியும் நபர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.