இலங்கை
முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியம் நீக்கப்படாது!
முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியம் நீக்கப்படாது!
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளைகளை இரத்துச் செய்யும் யோசனையில் அவர்களின் ஓய்வூதியம் நீக்கப்படாது என்று நீதிமன்றில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசியலமைப்பின் கீழ் குறித்த ஓய்வூதியம் நீக்கப்படாது என்று சட்டமா அதிபர் திணைக்களம் விளக்கமளித்துள்ளது. மாறாக 1986ஆம் ஆண்டின் ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது துணைவியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் சலுகைகளே குறைக்கப்படவுள்ளன என்று சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிகளின் உரிமைகளை இரத்துச்செய்தல் யோசனையை எதிர்த்துத்தாக்கல் செய்யப்பட்ட ஏழு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பாக முன்னிலையான பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.