இலங்கை

யானை தாக்கி இருவர் உயிரிழப்பு!

Published

on

யானை தாக்கி இருவர் உயிரிழப்பு!

குருணாகல் பிரதேசத்தில் பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கச் சென்ற தாயும் மகளும் யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மஹாவ, நிகவலயாய மதியாவ பகுதியை சேர்ந்த 28 வயதான தக்ஷிலா சுபாஷினி என்ற இளம் பெண் மற்றும் 53 வயதுடைய அவரது தாயார் இனோகா குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Advertisement

யானை தாக்கியதில் தாயும் மகளும் அம்பன்பொல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலத்த காயமடைந்த தாய், மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில்,  அங்கு வைத்து அவர் உயிரிழந்தார்.

அம்பன்பொல பிரதேச செயலகத்தின் மேலாண்மை சேவைகள் அதிகாரியான இனோகா குமாரி செயற்பட்டுள்ளார். காட்டு யானைகள் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் சுற்றித் திரிவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

காட்டு யானைகள் வழக்கம் போல் வந்திருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். 

தாக்குதலுக்குள்ளான மகளையும் தாயையும் மருத்துவமனையில் சேர்க்க குடியிருப்பாளர்கள் நடவடிக்கை எடுத்தனர். எனினும் அவர்களை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version