இலங்கை

ரணிலின் கைதுக்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ; வெளிவிவகார அமைச்சர்

Published

on

ரணிலின் கைதுக்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ; வெளிவிவகார அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு எந்த இராஜதந்திரிகளோ அல்லது இராஜதந்திர அமைப்புகளோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (27) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார்.

Advertisement

பல்வேறு நபர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருப்பதைக் குறிப்பிட்ட அமைச்சர், அவை கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் அல்ல என்று கூறினார்.

இந்த நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக செயல்படுத்தப்படுவதை சர்வதேச சமூகம் தற்போது அவதானித்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

இலங்கையில் சட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்று கடந்த காலங்களில் கூறப்பட்டாலும், இன்று அத்தகைய நிலைமை காணப்படவில்லை என்றும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version