இலங்கை
ரணிலின் விடுதலையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் இன்று போராட்டம்!
ரணிலின் விடுதலையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் இன்று போராட்டம்!
அழைப்பு விடுத்தது ஐ.தே.க.
முன்னாள் ஜனாதிபதிரணிலின் விடுதலையை வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கொழும்பில் இன்று போராட்டம் நடத்தத் தீர்மானித்துள்ளன. ஊழல் மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ரணில் தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்காக எடுக்கப்படவுள்ளது. இவ்வாறான பின்னணியிலேயே ‘ஜனநாயகத்தை நேசிக்கும் அனை வரும் கட்சி பேதங்களைக் கடந்து கொழும்பில் ஒன்றுதிரளவேண்டும்’ என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் அகிலவிராஜ் காரியவசம் அழைப்பு விடுத்துள்ளார்.
ரணில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் முழுக்கமுழுக்க அரசியற் பழிவாங்கலே காணப்படுகின்றது. அவருடைய பிணைக்காக முன்வைக்கப்பட்ட எந்தவொரு விண்ணப்பத்தையும் பொலிஸார் கருத்திற்கொள்ளவில்லை. இது ஜனநாயக விரோதச்செயற்பாடாகும். ரணிலின் உடற்தகுதி தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டன என்று அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.