இலங்கை

ரணிலை ஆதரித்து கூடிய அனைவருக்கும் நன்றி கூறிய ஐக்கிய தேசியக் கட்சி

Published

on

ரணிலை ஆதரித்து கூடிய அனைவருக்கும் நன்றி கூறிய ஐக்கிய தேசியக் கட்சி

இந்தக் காலகட்டத்தில் தனது கட்சி சார்பாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசம் கூறுகிறார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக வருகை தந்த 500க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளும் பெருந்திரளான மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைவருக்கும், குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், மேலும் மற்ற கட்சிகளின் சார்பாகவும் நாங்கள் நன்றி தெரிவிக்க வேண்டும்.

ஐநூறுக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் வந்தனர். குறிப்பாக இன்று ஒரு பெரிய மக்கள் கூட்டம் கூடியது.

Advertisement

அதற்கெல்லாம் நாங்கள் எங்கள் நன்றியைத் தெரிவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் ஒரு விடயத்தையும் சொல்ல வேண்டும்.

இந்த நீதித்துறையிலிருந்து சுயாதீனத்தை எதிர்பார்த்தோம்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு அநீதி இழைக்கப்பட்டதால் நாங்கள் எழுந்து நின்றோமே தவிர ஊழல், மோசடி மற்றும் திருட்டுக்காக போராடுபவர்கள் அல்ல என்பதை மேலும் கூற வேண்டும்.” என்றார்.

Advertisement

அதேநேரம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வந்த அனைவருக்கும் தனது நன்றியைக் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைவருக்கும், ஏனைய கட்சிகளின் தலைவர்களுக்கும் நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் ஆதரவளித்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

அத்துடன் நாமல் ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கும், ரணில் விக்ரமசிங்கவுக்காக ஆஜரான அனைத்து சட்டத்தரணிகளுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version