இலங்கை

ரணிலை கொலை செய்யுமாறு வெளியான பதிவால் சர்ச்சை – சி.ஐ.டியில் முறைப்பாடு!

Published

on

ரணிலை கொலை செய்யுமாறு வெளியான பதிவால் சர்ச்சை – சி.ஐ.டியில் முறைப்பாடு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மருத்துவமனையில் வைத்தே கொலை செய்யுமாறு வெளியிடப்பட்ட சமூக ஊடக பதிவொன்றுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணத்திற்காக அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக ஓகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisement

இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவை படுகொலை செய்ய வலியுறுத்தி சமூக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பாக கடுவெல பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பிரபாத் தர்ஷன உள்ளிட்ட சிலர் இன்று சி.ஐ.டி.யில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரபாத் தர்ஷன, மருத்துவமனையில் இருக்கும் போது ரணில் விக்ரமசிங்கவை படுகொலை செய்யக் கோரி சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரப்பப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அத்தகைய செய்திக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version