இலங்கை
ரணிலை பிரதமர் பார்க்கச் சென்றதாக வெளியான செய்தி – பிரதமர் தரப்பு வெளியிட்ட தகவல்!
ரணிலை பிரதமர் பார்க்கச் சென்றதாக வெளியான செய்தி – பிரதமர் தரப்பு வெளியிட்ட தகவல்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட பிரதமர் ஹரிணி அமரசூரிய மருத்துவமனைக்குச் சென்றதாக வெளியான செய்திகள் போலியானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஊடகப் பிரிவு, இது போலியான செய்தி என்பதை உறுதிப்படுத்தினர்.
கைது செய்யப்பட்டு தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பார்வையிட பிரதமர் ஹரிணி அமரசூரிய சென்றுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவுடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய வருகைத் தந்ததாக தெரிவித்து மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்த தகவல் வெளியாகியிருந்தது.
எனினும், குறித்த செய்தி போலியானது என்றும், ரணில் விக்ரமசிங்கவைப் பார்வையிட பிரதமர் ஹரிணி செல்லவில்லை என்றும் பிரதமர் தரப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த செய்தி தொடர்பில் பிரதமர் அலுவலகம் மறுப்பறிக்கை ஒன்றையும் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.