இலங்கை

ரணில் விடுத்துள்ள அவசர கோரிக்கை!

Published

on

ரணில் விடுத்துள்ள அவசர கோரிக்கை!

நாட்டின் எதிர்க்கட்சிகள் இந்த நேரத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக போராட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சில முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் இந்த கோரிக்கயை முன்வைத்துள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மூத்த அரசியல்வாதிகள் அவரை சந்தித்தபோது அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீரிழப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வருவதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து இருப்பதாகக் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஓருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

விக்ரமசிங்கேவின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதால், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் உறுப்பினர்களும் நாளை கொழும்பில் ஒன்றுகூட உள்ளனர்.   

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version