இலங்கை
ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!
ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்துள்ளது. டொலர் ஒன்றின் கொள்வனவு விலை நேற்று 298 ரூபா 23 சதமாகப் பதிவாகியுள்ளது. விற்பனை விலை 305 ரூபா 76 சதமாகப் பதிவாகியிருந்தது. ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 414.1296 ரூபாவாகவும், கொள்வனவு விலை 400.9432 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.