வணிகம்

ரூ.3,700-லேயே ஹால்மார்க் தங்கம் வாங்கலாமா? 24K தங்கத்திற்கு டஃப் கொடுக்கும் 9K! வித்தியாசம் என்ன?

Published

on

ரூ.3,700-லேயே ஹால்மார்க் தங்கம் வாங்கலாமா? 24K தங்கத்திற்கு டஃப் கொடுக்கும் 9K! வித்தியாசம் என்ன?

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாகவே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. குறிப்பாக, இந்தியா மீது அமெரிக்கா விதித்த அதிக வரிகளால் தங்கக்கட்டிகளின் விலை மேலும் உயர்ந்தது. இதனால் வாடிக்கையாளர்களின் வாங்கும் திறன் குறைந்து, தங்கத்தின் விற்பனையும் மந்தமடைந்தது.உலகின் மிகப்பெரிய தங்க நுகர்வோர் நாடான இந்தியாவில், கடந்த ஜூனில் மட்டும் தங்க விற்பனை 60% சரிவு கண்டது இந்தப் பிரச்னையின் தீவிரத்தை உணர்த்துகிறது.தங்கம் வாங்குவதில் பொதுமக்களை ஊக்குவிக்க, மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹால்மார்க் தரநிலைகளில் 9 காரட் தங்கத்திற்கு ஒப்புதல் அளித்து, அதை அதிகாரப்பூர்வ பட்டியலில் சேர்த்துள்ளது. 2025 ஆகஸ்ட் முதல் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்க நகைகளில் 14K, 18K, 20K, 22K, 23K, 24K ஆகிய தூய்மை அளவுகளுடன், தற்போது 9K தங்கமும் இணைந்துள்ளது.24 காரட் vs 9 காரட்: என்ன வித்தியாசம்?வழக்கமாக அனைவரும் முதலீடு செய்யும் 24 காரட் தங்கம் 99.9% தூய்மையான தங்கம். இதில் வேறு எந்த உலோகங்களும் கலந்திருக்காது. ஆனால், 9 காரட் தங்கம் என்பது 37.5% மட்டுமே தூய்மையான தங்கத்தைக் கொண்டது. அதாவது, மொத்தமுள்ள 24 பங்குகளில் 9 பங்கு மட்டுமே தங்கமாக இருக்கும். மீதமுள்ள 62.5% செம்பு, வெள்ளி, துத்தநாகம் போன்ற அலாய் உலோகங்களால் ஆனது.9 காரட் தங்கத்தின் பயன்கள்24 காரட் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பலரும் அதில் முதலீடு செய்வதைக் குறைத்துள்ளனர். ஆனால், 9 காரட் தங்கம் குறைந்த விலை கொண்டிருப்பதால், இளம் முதலீட்டாளர்கள், கிராமப்புற வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் விலை மிகவும் மலிவு என்பதால், குறைந்த பட்ஜெட்டில் தங்கம் வாங்க விரும்புபவர்களுக்கு இது சரியான தேர்வு. அலாய் உலோகங்கள் கலந்திருப்பதால், நகைகளை வடிவமைப்பது எளிதாகிறது. விலை மலிவானதால், திருடர்கள்கூட இதை திருடுவதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். இதனால், இது ஒரு பாதுகாப்பான முதலீடாகவும் அமைகிறது.தற்போது, 24 காரட் தங்கம் ஒரு கிராம் சுமார் ரூ.10,000 என்ற அளவில் விற்பனையாகிறது (10 கிராம் ரூ.1 லட்சம்). ஆனால், 9 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.3,700 மட்டுமே. இதன் மூலம் 10 கிராம் 9 காரட் தங்கத்தை ரூ.37,000-க்கு வாங்க முடியும். தீபாவளி போன்ற பண்டிகைகள் வரவிருக்கும் நிலையில், மக்கள் மத்தியில் தங்கத்தின் தேவை அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் மத்திய அரசு 9 காரட் தங்கத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பது, நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version