பொழுதுபோக்கு

லியோ விஜய் அப்பாவுக்கு எஜமானி; ரஜினிக்கு மாஸ் வில்லி: ராஜமாதா பாலிவுட்டில் நடித்துள்ளரா?

Published

on

லியோ விஜய் அப்பாவுக்கு எஜமானி; ரஜினிக்கு மாஸ் வில்லி: ராஜமாதா பாலிவுட்டில் நடித்துள்ளரா?

திரையுலகில் பல நட்சத்திரங்கள் வந்துபோனாலும், காலத்தால் அழியாத பெயர் ரம்யா கிருஷ்ணன். 30 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரைப் பயணத்தில், இவர் கதாநாயகி, வில்லி, தாய் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது ஆற்றலையும் கம்பீரத்தையும் வெளிப்படுத்தி ரசிகர்களைக் கட்டிப் போட்டுவிடுகிறார். அவரது கவர்ச்சியான நடிப்பு மட்டுமின்றி, திரையில் அவர் வெளிப்படுத்தும் தீவிரம், அவரை ரசிகர்கள் மனதில் தனித்துவமான இடத்தைப் பெறச் செய்துள்ளது.சினிமாவில் ஒரு நடிகையின் பயணம் அவ்வளவு எளிதல்ல. ஆனால் ரம்யா கிருஷ்ணனின் அசாத்தியமான வெற்றி, அவர் இன்றும் ஏன் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தகவல்களின்படி, அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.98 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு படத்திற்கு அவர் வாங்கும் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரையிலான சம்பளம், அவரது மார்க்கெட் மதிப்பை நிரூபிக்கிறது. விளம்பரங்கள் மற்றும் பிராண்ட் ஒப்பந்தங்கள் மூலம் அவர் பெறும் வருமானம் இதற்கு மேலும் பலம் சேர்க்கிறது.பாகுபலியில் அவர் ஏற்று நடித்த சிவகாமி தேவி கதாபாத்திரம், ரம்யா கிருஷ்ணனை இந்திய அளவில் ஒரு நட்சத்திரமாக மாற்றியது. அவரது அழுத்தமான குரலும், கம்பீரமான தோரணையும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்தக் கதாபாத்திரத்தின் வெற்றிக்குப் பிறகு, அவரது சம்பளம் புதிய உயரத்தை எட்டியது. 2023-ல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில், ரஜியின் மனைவியாக நடித்தார். இந்தப் படம் உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.90களில் பாலிவுட்டிலும் ரம்யா கிருஷ்ணன் தனது முத்திரையைப் பதித்தார். சஞ்சய் தத் நடிப்பில் வெளிவந்த ‘கல்நாயக்’ (1993) படத்தில் அவரது நடிப்பு பெரும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் வரும் “நயக் நஹி… கல்நாயக் ஹூன் மெயின்” பாடல் இன்றும் மிகப் பிரபலமானது. மேலும், ஃபிரோஸ் கானின் ‘தயாவான்’ படத்தில் வினோத் கன்னாவுடன் அவர் நடித்த காட்சிகள் மற்றும் “சாஹே மேரி ஜான் து லே லே…” பாடல் ஆகியவை பாலிவுட் ரசிகர்களால் மறக்க முடியாதவை.தன்னை மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொள்வதில் ரம்யா கிருஷ்ணன் ஒருபோதும் தயங்கியதில்லை. கவர்ச்சியான நடனமோ, காதல் காட்சியோ, அல்லது ஒரு வலுவான கதாபாத்திரம் சார்ந்த வேடமோ, அனைத்தையும் அவர் ஏற்று நடித்தார். இந்தத் தகவமைக்கும் திறன்தான், இன்றும் அவரை இந்திய சினிமாவின் வெற்றிகரமான நடிகைகள் லிஸ்டில் நிலைநிறுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version