இலங்கை
வடக்குக் கடற்பரப்புகளில் கடும் காற்றுக்கு வாய்ப்பு!
வடக்குக் கடற்பரப்புகளில் கடும் காற்றுக்கு வாய்ப்பு!
வடக்கு மாகாணக் கடற்பரப்புகளில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை காணப்படும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது:-
சப்ரகமுவ மற்றும் மேல்மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு தொடக்கம் காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழைபெய்யக்கூடும். மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் -என்றுள்ளது.